ETV Bharat / city

நெல்லையில் ரூ.7 கோடியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Integrated Banana Auction Center at Kalakkad

நெல்லையில் சுற்றுலாவை மேம்படுத்த மணிமுத்தாறில் ரூ.7 கோடியில் பல்லூயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும், வாழை விவசாயிகளின் கோரிக்கையின் படி, களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையமும் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 8, 2022, 7:08 PM IST

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.156.28 கோடியில் 727 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து ரூ.74.24 கோடியில் முடிவுற்ற 29 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ரூ.117.78 கோடியில் 30,658 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு: முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நிகழ்ச்சியில் சபாநாயகர் நன்றாக பேசினாலும் சுருக்கமாக பேசவில்லை இருப்பினும் அவரின் கருத்துகள் நன்றாக இருந்தன. வீரத்தின் விளைநிலமாகவும் புலவர்களால் பாராட்டப்பட்ட ஊராகவும் உள்ள திருநெல்வேலியில் பேசுவதால் நான் பெருமை அடைகிறேன். இது தமிழகத்திலேயே அதிக கல்வி நிறுவனங்கள் முதலில் உருவான ஊர் நெல்லை தான்; தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு நகரம் இது.

நெல்லையப்பர் கோயிலின் குடமுழுக்கு நடத்தியவர், கருணாநிதி. 1973ஆம் ஆண்டு இங்கு ஈரடக்கு பாலம் அமைத்து அதற்கு திருவள்ளுவரின் பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கருணாநிதி. தனக்கு ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தாலும், நெல்லையை தொல்லையாக எண்ணாமல் இரட்டை குதிரை வேகத்தில் செயல்படுபவர் இம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன். கடந்த ஓராண்டில் திமுக ஆட்சி மக்களுக்கு மிக மிக பலனுள்ளதாக உள்ளது.

திட்டங்களும் பயன்பெற்றவர்களும்: 1113 பேர் "இன்னுயிர் காக்கும் திட்டம்"-ல் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். கூட்டுறவு சார்பில் 9,389 விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளனர். "மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தில் இதுவரை 20 லட்சம் பேரும்; "இல்லம் தேடி கல்வி" திட்டத்தில் 54,917 மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர். மகளிர் இலவச பயண திட்டத்தில் 6 கோடி 92 லட்சம் மகளிர் இதுவரை பயன்பெற்றுள்ளனர். ரூ.117.78 கோடி 30658 பயனாளிகளுக்கு மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்கபட்டுள்ளது. அதில், 3,421 பேர் நெல்லையில் பயன் பெற்றுள்ளனர். ரூ.156 கோடி 28 லட்சல் மதிப்பில் இன்று 727 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ.74.24 கோடியில் முடிவுற்ற திட்ட பணிகளையும் தொடங்கியுள்ளோம்.

நெல்லையில் ரூ.7 கோடியில் பல்லூயிர் சுற்றுச்சூழல் பூங்கா - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிடப்பில் கிடந்த திட்டம்: பொருநை நாகரிகம் தோன்றிய நகரம் இது. எனவே, அதை போற்றும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கருணாநிதியின் கனவு திட்டமான "தாமிரபரணி நம்பியாறு கருமேனியாறு இணைப்பு திட்டம்" 2009-ல் துணை முதலமைச்சராக இருந்தபோது ரூ.369 கோடி கருணாநிதி முதல்கட்டமாக நிதி ஒதுக்கினார். கடந்த 10 ஆண்டுகளாக அதில் எந்த பணியும் இல்லாமல் கிடப்பில் போட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டேன். எனவே, வரும் 2023-க்குள் அத்திட்டம் முடிக்கபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அதன் மூலம் நெல்லை, தூத்துக்குடியில் 20340 ஏக்கர் வேளாண் நிலம், 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

பல்லூயிர் சுற்றுச்சூழல் பூங்கா: திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மணிமுத்தாறில் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.7 கோடி மதிப்பில் பல்லூயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கபடும். வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். கடற்கரை கிராமத்தில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கபடும்.

தாய் கேர் திட்டம்: நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலைக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. ரூ.370 கோடியில் மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில் கர்ப்பனி பெண்களுக்கான "தாய் கேர் திட்டம்" கொண்டுவரப்பட்டது நெல்லையில் தான்.

அரசுக்கு ஆதரவு தருக: என்னை பொறுத்தவரை பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக்கூடாது. அதனால், தான் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தை தொடங்கினேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்திட்டம் கிடையாது. தமிழக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் இந்தியா முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் எனவே, நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஆதரவு தாருங்கள்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டாலும் ஓ.பி.எஸ்.ஐ ஏற்க முடியாது - எடப்பாடி ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.