நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டம் நாளை மறுநாள் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அந்தப் பகுதி எல்லையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுபானக் கடைகள் இன்று, நாளை, தேர்தல் நடைபெறும் நாளான நாளை மறுநாள்(அக்.6) என மூன்று நாட்கள் அடைக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
மூன்று நாட்கள் விடுமுறையால் வரிசையில் நின்ற மதுப்பிரியர்கள்
அதன்படி நெல்லை மாநகர்ப் பகுதியில் உள்ள 38 கடைகளில், எட்டு கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது. 30 கடைகள் அடைக்கப்பட்டதையடுத்து, மதுபானக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள 90 கடைகள் இன்று முதல் ஆறு நாட்கள் அடைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ’பூக்குழந்தை நானே...’ வகேஷன் போட்டோ பகிர்ந்த ’குட்டி மயிலு’ ஜான்வி!