ETV Bharat / city

திட்டங்களை நிறைவேற்றி வரும் திமுக ஆட்சி - பொன்னார் பாராட்டு

தமிழ்நாட்டில் 100 நாள் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

author img

By

Published : Aug 15, 2021, 10:25 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு பாஜக சார்பில் சுதந்திரத்திற்காக போராடிய 75 தியாகிகளை கெளவுரவிக்கும் விதமாக, அவர்கள் வாழ்ந்த வீடுகள், மணி மண்டபங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவர் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலக அரங்கில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறார். விவசாய முன்னேற்றம், தொழிலாளர் முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை வேகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தியாகிகளின் வழியில் நாமும், நாடு முதல் நிலைக்கு வருவதற்கு துணை நிற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தேச விடுதலைக்காகப் போராடிய 75 தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களது வீடுகள் மணி மண்டபங்களில் அஞ்சலி செலுத்துகிறோம். தேச விடுதலைப்போரில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் முதல் நிலையில் உள்ளது.

வ.உ. சிதம்பரனார், பாரதி, வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் என பல தியாகிகளை கொண்டது திருநெல்வேலி மண். செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவரது பிறப்பு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்கள் சரியாக இடம்பெறவில்லை என தெரியவருகிறது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தியாகிகளின் மணிமண்டபங்களில், அவர்களது வரலாறு சரியாக குறிப்பிடப்பட வேண்டும் என முதலமைச்சருக்கு பாஜக சார்பில் கோரிக்கையாக வைக்கிறேன்.

புதிதாக பொறுப்பேற்ற அரசு இன்று 101ஆவது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், பெட்ரோல் வரி 3 ரூபாய் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை 100 நாட்களில் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

இந்த திட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவை. அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பாக பணிபுரிந்து கடமையாற்றுவோம் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அவர் கூறியதுபோன்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.

அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது. வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.