திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மூன்று தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய காவல் துறையினர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது கொலையை தான் ஒருவனே செய்ததாக கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை காவல் துறையினர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, கார்த்திகேயனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.