ETV Bharat / city

தாமிரபரணி - நம்பியாறு- கருமேணி ஆறு இணைப்பு திட்டம் - சபாநாயகர் அப்பாவு ஆய்வு

தாமிரபரணி - நம்பியாறு- கருமேணியாறு இணைப்பு திட்டத்தின் 4ஆம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு, அரசு அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

speaker appavu
சபாநாயகர் அப்பாவு
author img

By

Published : May 22, 2021, 12:55 PM IST

திருநெல்வேலி: பொன்னாக்குடி, பெருமாள் நகர், முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி - நம்பியாறு- கருமேணி ஆறு இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதியதாக 872.45 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 75 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுவரும் நதி நீர் கால்வாயின் நான்காம் கட்டபணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "2008-09ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளார். நான்காம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலை குறுக்கே பாலமும், ரயில்வே பாலமும் அமைக்கப்பட உள்ளது. ரூ.15 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

நான்காம் கட்ட பணிகளில் நடைபெறவிருக்கும் பாலப்பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்புத் திட்டம் 80 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெற்று விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் செயல் படுத்தப்படும். இந்தத் திட்டம் தொடங்கும்போது மதிப்பீடு ரூ.370 கோடி இருந்த நிலையில், தற்போது, ரூ.900 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறன. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கிய நபர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.