தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று (மார்ச் 19) நிறைவு பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மார்ச் 17 வரையில் மொத்தம் 99 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று மட்டும் 90 பேர் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சை வேட்பாளர்கள். மாவட்டத்தில் தொகுதி வாரியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்:
அம்பாசமுத்திரம்: இசக்கிசுப்பையா (அதிமுக), ஆவுடையப்பன் (திமுக), சி. ராணி ரஞ்சிதம் (அமமுக), சி. கணேசன் (மநீம), செண்பகவள்ளி (நாதக), எம். சுரேந்திரன் (புதிய தமிழகம்)
நாங்குநேரி தொகுதி: கணேசராஜா (அதிமுக), ரூபி மனோகரன் (காங்கிரஸ்), பரமசிவஐயப்பன் (அமமுக), சார்லஸ் ராஜா (மநீம), வீரபாண்டி (நாதக), அசோக்குமார் (புதிய தமிழகம்), சுப்புலட்சுமி (பகுஜன் சமாஜ்).
பாளையங்கோட்டை தொகுதி: ஜி. ஜெரால்டு (அதிமுக), அப்துல் வகாப் (திமுக), முகமது முபாரக் (எஸ்டிபிஐ), டி. பிரேம்நாத் (மநீம), ஏ. பாத்திமா (நாதக).
திருநெல்வேலி தொகுதி: நயினார் நாகேந்திரன் (பாஜக), ஏஎல்எஸ் லட்சுமணன் ( திமுக), பி. பாலகிருஷ்ணன் (அமமுக), டி. அழகேசன் (மநீம), சத்யா (நாதக).
ராதாபுரம் தொகுதி: ஐ.எஸ். இன்பதுரை (அதிமுக), மு. அப்பாவு (திமுக), எஸ். உத்தரலிங்கம் (மநீம), டி. சரவணகுமார் (சமக), ஆர். ஜேசுதாசன் (நாதக)
குறிப்பாக, கடைசி நாளான நேற்று மட்டும் திருநெல்வேலி தொகுதியில் 21 பேரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 16 பேரும்,பாளையங்கோட்டையில் 17 பேரும், நாங்குநேரியில் 13 பேரும், ராதாபுரம் தொகுதியில் 13 பேர் என மொத்தம் 90 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘திமுகவினர் கலாட்டா செய்யாத ஒரே கடை சாக்கடை!’