ETV Bharat / city

மகன் காதல் திருமணம்: காவலர்கள் விசாரணையால் மனமுடைந்த தாய் தற்கொலை!

சேலம்: மகனின் காதல் திருமணம் குறித்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தாய் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெண் தற்கொலை
பெண் தற்கொலை
author img

By

Published : Mar 27, 2021, 2:06 PM IST

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த அஜித் என்பவர் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள நூலகம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார். அவருக்கும் அதே நூலகத்தில் பணிபுரிந்துவந்த சந்தியா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இருவரும் 10 நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தியாவின் பெற்றோர் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவலர்கள் அஜித்தின் தாய் சம்பூரணத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், சம்பூர்ணம் நேற்று (மார்ச் 26) மாலை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள், காவலர்கள் விசாரணையால்தான் இந்தத் தற்கொலை நிகழ்ந்துள்ளதாகக் கூறி, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல் ஆணையர் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நம்பிக்கைத் தெரிவித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: கைதி தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.