தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக உடல் தகுதித் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உடல் தகுதித் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுவரும் உடல் தகுதித் தேர்வில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்து, 913 பேர் பங்கேற்க உள்ளனர்.
தேர்வு முழுவதும் வீடியோ பதிவு
நாள்தோறும் 500 பேர்கள் வீதம் பங்கேற்க காவல் துறை சார்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 500 பேர்கள் இன்று உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
தேர்வர்களின் உயரம், எடை, மார்பளவு, ஏழு நிமிடத்திற்குள் 1,500 மீட்டரை கடப்பவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தகுதித் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முறைகேட்டை தடுக்க தேர்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், உடல் தகுதித் தேர்வுக்கு வருபவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: 'போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்த தடை'