ETV Bharat / city

அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்: ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! - அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி நிர்வாகி புகழேந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

புகழேந்தி
author img

By

Published : Nov 10, 2019, 5:14 PM IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதிருப்தி நிர்வாகி புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய தீர்மானங்கள் கீழ்வருமாறு:

  • எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள், வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
  • அமமுகவை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு முன்னரே பொதுச் செயலாளர் என்கிற பெயரில் அந்த அமைப்பை டிடிவி தினகரன் தான்தோன்றித்தனமாக நடத்தி வருவதையும் சுட்டிக் காட்டி விவரமான புகாரினை கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு விசாரணைக்காக அளித்துள்ளார். தேவையானால் மேற்படி அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என வழக்கு மன்றத்திற்குச் செல்லவும் புகழேந்தி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து இந்த நிர்வாகிகள் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
    அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்: ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை வியாபார நோக்கத்துடன் திரைப்படமாக எடுப்பதற்கு, இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஜெயலலிதா வரலாற்றை வியாபார நோக்குடன் திரைப்படமாக எடுக்க முற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் இந்த நிர்வாகிகள் கூட்டம் அனுமதி அளிக்கிறது.
  • உலக பொதுமறை நூலாக 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் திருக்குறளை எழுதிய, உலகப் பெரும் புலவர் திருவள்ளுவர் இழிவு படுத்துவதும் அவருக்கு சமயச் சாயம் பூசுவதும் கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்த நிர்வாகிகள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  • ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த குழந்தை சுஜித்தின் ஆன்மா சாந்தி அடைய இந்த கூட்டம் பிரார்த்திக்கிறது. ஆழ்குழாய் கிணறு தோண்டிய நிறுவனம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
  • உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் டிடிவி தினகரன் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்துவிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விடும் எனவே பதிவு பெறாத ஒரு சங்கத்தைப் போல் டிடிவி தினகரன் நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற நிறுவனத்தை நம்பி இனி இளைஞர்களின் போக வேண்டாம் என இந்த கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  • எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கத்தையும் அம்மாவின் ஆட்சியையும் சீரோடும் சிறப்போடும் வெற்றிப்பாதையில் நடத்தி வருகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது என இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Intro:போட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் வா. புகழேந்தி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Body:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் வா. புகழேந்தி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் நடந்து முடிந்த நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்கள் நிர்வாகிகள் கழக தொண்டர்கள் தோழமை கட்சியினர் அனைவருக்கும் இந்த நிர்வாகிகள் கூட்டம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகியும் தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாமல் பெயரளவில்தான் உள்ளது இது ஓர் ஏமாற்று வேலை என்பதை உணர முடிகிறது கட்சியைப் பதிவு செய்வதாக கூறி 100 நிர்வாகிகளிடம் பிராமண பத்திரம் பெற்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது இதற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா இன்பத்தமிழன் பச்சைமால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கத்தமிழ்செல்வன் திருப்பூர் சிவசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் பி ஆதித்தியன் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் k.c. சொக்கலிங்கம் கல்லூரி வேலாயுதம் பாப்புலர் முத்தையா வேளச்சேரி சரவணன் பரணி கார்த்திகேயன் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற வேட்பாளர் முருகசாமி என இவர்கள் அனைவரும் பெயரளவில் உள்ள அமைப்பிடம் இருந்து விலகி விட்டனர் ஆதரவையும் திரும்பப் பெற்று உள்ளனர் எனவே மனுவினை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்தபோது இருந்தவர்களில் பலர் விலகி எதையும் தேர்தல் ஆணையம் கட்சியை அங்கீகரிப்பதற்கு முன்னரே பொதுச்செயலாளர் என்கிற பெயரில் அந்த அமைப்பை டிடிவி தினகரன் தான்தோன்றித்தனமாக நடத்தி வருவதையும் சுட்டிக் காட்டி விவரமான புகாரினை கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு விசாரணைக்காக அளித்துள்ளார் தேவையானால் மேற்படி அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என வழக்கு மன்றத்திற்கு செல்லவும் புகழேந்தி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து இந்த நிர்வாகிகள் கூட்டம் தீர்மானம் நிறைவேற்று இருக்கிறது.

முதலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை வியாபார நோக்கத்துடன் திரைப்படமாக எடுப்பதற்கு இந்த கூட்டம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஜெயலலிதா வரலாற்றை வியாபார நோக்குடன் திரைப்படமாக எடுக்க முற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் இந்த நிர்வாகிகள் கூட்டம் அனுமதி அளிக்கிறது.

உலக பொதுமறை நூலாக 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் திருக்குறளை எழுதிய உலகப் பெரும் புலவர் திருவள்ளுவர் இழிவு படுத்துவதும் அவருக்கு சமயச் சாயம் பூசுவதும் கண்டிக்கிறோம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்த நிர்வாகிகள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த குழந்தை சுஜித் பின் ஆன்மா சாந்தி அடைய இந்த கூட்டம் பிரார்த்திக்கிறது ஆழ்குழாய் கிணறு தோண்டிய நிறுவனம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த வகை கிணறு அமைப்பது சம்பந்தமாக ஏற்கனவே அரசு விதித்துள்ள சட்டத்திட்டங்களை கடுமையாக்க நிறைவேற்ற வேண்டும் குழந்தைகள் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தும் வகையில் அரசு உரிய சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் டிடிவி தினகரன் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்துவிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காணாமல் போய்விடும் எனவே பதிவு பெறாத ஒரு சங்கத்தை போல டிடிவி தினகரன் நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கம்பெனியை நம்பி இனி இளைஞர்களின் போக வேண்டாம் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டிடிவி தினகரனை கழக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டபோது கழகத்தை காப்பாற்றுவார் என்று நம்பி அவர் பின்னால் அணிவகுத்து ஆனால் டிடிவி தினகரன் அவர்கள் தனது சுயநலத்தையும் ஆளுமை இன்மையாலும் நிர்வாகத்திறமை இன்மையாலும் துணை பொது செயலாளர் பதவியையும் அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை அவரை நம்பி அவர் பின்னால் சென்ற நிர்வாகிகளையும் தொண்டர்களையும் காப்பாற்ற அவரால் முடியவில்லை டிடிவி தினகரன் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விட்ட நிலையில் பெரும்பாலான தமிழக மக்களின் விருப்பப்படி தமிழகம் முழுவதும் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கத்தையும் அம்மாவின் ஆட்சியையும் சீரோடும் சிறப்போடும் வெற்றிப்பாதையில் நடத்தி வருகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைவது என இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Conclusion:அதிமுகவில் சேருவது தொடர்பாக புகழேந்தி தலைமை யிலான ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.