ETV Bharat / city

ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம் போராட்டம் வாபஸ்!

சேலம்: தமிழ்நாடு ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அதன் மாநில தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 6, 2020, 5:34 PM IST

segoserv issue association president bite
ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்கம் போராட்டம் வாபஸ்

கடந்த சில நாட்களாக சேலம் குரங்கு சாவடி பகுதியில் அமைந்துள்ள சேகோ சர்வ் ஜவ்வரிசி விற்பனை கிடங்கில் கலப்படம் செய்ய்ப்படுவதாக சேகோ ஆலை உரிமையாளர்களுக்கும், சேகோசர்வ் நிர்வாகத்திற்கும் , ஜவ்வரிசி, ஸ்டார்ச் விற்பனை தொடர்பாக முரண்பாடுகள் எழுந்தது.

இதனை அடுத்து நேற்று முன்தினம்(டிச.4) கலப்பட ஜவ்வரிசி லோடு ஏற்றி வந்ததாக கூறி லாரியை சேகோசர்வ் நிர்வாகத்தினர் மடக்கிப்பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலப்பட ஜவ்வரிசி லாரி லோடு ஏற்றி வந்த ஓட்டுனர் லாரியுடன் தப்பினார். இதனை அடுத்து சேகோசர்வ் நிர்வாகம் தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வந்தது.

இந்த நிலையில் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜவ்வரிசி கலப்படம் இல்லாதது என்றுகூறி, சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் சேகோசர்வ் நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முறையான தீர்வு கிடைக்காததால் ஜவ்வரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

பின்னர், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்திற்கு, சேகோசர்வ் நிர்வாகத்தின் பெயரில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து புகார் மனு அனுப்பினர்.

அதனையடுத்து மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள் நலன் கருதி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் தரப்பில் இருந்து வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்களின் முன்னேற்ற நலச் சங்க மாநில தலைவர் துரைசாமி கூறுகையில்," சேலம் மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கு இதே மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் நெருக்கடி அதிகம் உள்ளது. கலப்பட ஜவ்வரிசி விற்பனை செய்வதற்கு அவரே காரணம். இது தொடர்பாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு நாங்கள் அளித்த புகாரின் பெயரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வாக்குறுதியை நம்பி நாங்கள் விவசாயிகளின் நலன் கருதி, அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். அடுத்தமுறை முதலமைச்சர் சேலம் வரும் போது மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து முறையிட்டு சரியான தீர்வை பெற முடிவு செய்து உள்ளோம் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.