ETV Bharat / city

சேலம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021 ; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...! - salem district watch

கற்காலம் தொடங்கி தற்காலம் வரையில் வரலாற்றுச் சிறப்புகள் பலவற்றைத் தன்னுள் தக்கவைத்துள்ளது வணிக மையமான சேலம். மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரம், இரும்பு முதல் இனிப்பான மல்கோவா மாம்பழம் வரை பெயர் போனது. மாநகரின் எல்லைகளாக தெற்கே நாமக்கல், மேற்கே ஈரோடும், வடக்கே தர்மபுரி, கிழக்கே கள்ளக்குறிச்சி அமைந்துள்ளன. வருடம் முழுவதும் விவசாயம் நடைபெறும் மாவட்டத்தில் நெசவு, வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பும் உப தொழில்களாக இருக்கின்றன.

தேர்தல் 2021
சேலம் தொகுதிகள் வலம்
author img

By

Published : Mar 7, 2021, 6:20 PM IST

வாசல்:

பல் தொழில்களும், கனிம வளங்களும் நிறைந்த தமிழ்நாட்டின் 5ஆவது இந்தப் பெரிய நகரத்தில், 8 பொதுத் தொகுதிகளும், 3 தனித் தொகுதிகளும் உள்ளன.

தொகுதிகள் வலம்:

கெங்கவல்லி (தனி): மாவட்டத்தின் தனி தொகுதி கெங்கவல்லி. இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.

நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேத நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை.

இதனை சரி செய்து சுவேத நதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும்.

சேலம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021 ; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

தொகுதியிலுள்ள பல அரசு பள்ளிகளின் கட்டிடங்களும் வலுவிழந்து காணப்படுகின்றன. அவற்றை சரி செய்ய வேண்டும், சட்ட விரோத மது விற்பனை தடுக்கப்பட வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் வேண்டுகோள்.

ஆத்தூர் (தனி): மாவட்டத்தின் முக்கியமான தொகுதி ஆத்தூர். சேலம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை ஆத்தூர் வழியாக செல்வதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். தொகுதியின் பிரதான தொழிலும் விவசாயமே.

இவைத் தவிர, 20க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள், நெல் அரவை ஆலைகள் ஒரளவுக்கு வேலைவாய்ப்பைத் தருகின்றன. மாற்றுத் தொழிலை ஏற்பாடுகள் எதுவும் இல்லை. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி இங்குள்ள சேகோ ஆலைக் கழிவுகளால் பாழாகும் அவலம் தொடர்கிறது.

ஏற்காடு (தனி-பழங்குடியினர்) : எளியவர்களும் செல்லக்கூடிய வகையிலுள்ள ஏற்காடு மலை அமைந்துள்ள இந்தத் தொகுதி பழங்குடியினர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. மலை கிராமங்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இந்தத் தொகுதி வழியாக செல்லவிருந்த எட்டு வழிச்சாலை மக்கள் எதிர்ப்பின் காரணமாக, ஆறு வழிச்சாலையாக மற்றப்பட்டுள்ளது.

எடப்பாடி: முதலமைச்சரின் சொந்த தொகுதி என்பதால் சிறப்பு கவனம் பெறுகிறது எடப்பாடி. தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயமும், நெசவும். மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் போது, பத்து கிராமங்கள் நீரால் சூழப்பட்டு தொடர்பில்லாமல் துண்டிக்கப்படுவது, விளை நிலங்களுக்குள் எண்ணெய் குழாய்கள், தண்ணீர் குழாய்கள் பதிக்கப்படுவது தொகுதியின் பெரும் பிரச்னையாக நீண்ட காலமாகத் தீர்ப்படாமல் உள்ளது.

சங்ககிரி: இந்தத் தொகுதிக்கான அடையாளங்களுள் ஒன்று மலைக்கோட்டை. லாரிகளுக்கான 'பாடி பில்டிங்' தொழில் இங்கு பிரதானம். அதன் உபதொழில்களான கனரக வாகனங்களுக்கு வண்ணம் பூசுதல், லேத் பட்டறைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன தொழில்களும் தொகுதியில் ஏராளம்.

தொழில்கள் ஒரே இடத்தில் நடைபெறும் வகையில், ஒரு ஆட்டோ நகர் தொடங்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை. அடிக்கடி போக்குவரத்து நெரிசலை சந்தித்து வரும் ஆர்.எஸ்.புரம் ரயில்வே சுரங்கப் பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். மலைக்கோட்டையைப் பராமரிக்க வேண்டும்.

சேலம் தெற்கு: தொகுதியின் பிரதான தொழில் நெசவு. இத்தொகுவாசிகளில் 60 விழுக்காட்டினர் நெசவு தொழிலையே செய்துவருகின்றனர். தனித் தன்மைக்காகப் புவிசார் குறியீடு பெற்ற சேலம் வெண்பட்டு உற்பத்தி, இத்தொகுதியில் தான் நடக்கிறது.

மக்களின் பிரதான கோரிக்கை, இங்கு ஜவுளி பூங்கா ஒன்றைத் தொடங்க வேண்டும். கடந்த 2011ஆம் ஆண்டு, அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு: சேலம் இரும்பாலை, ரயில்வே ஜங்ஷன், இந்தத் தொகுதியில் உள்ளன. கயிறு திரிக்கும் தொழில், விவசாயம் நடைபெறுகிறது. தொகுதியின் பிரதான பிரச்னை, செட்டிச்சாவடியில் அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கு. இதனை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும், வெள்ளக்கல்பட்டி, டால்மியாபுரம் பகுதியில் வெள்ளக்கல் சுரங்கங்களில் நடைபெறும் கனிம கொள்ளையையும் தடுக்கப்பட வேண்டும்.

சேலம் வடக்கு: மாவட்டத்தின் மத்தியில் இருக்கும் தொகுதி இது. ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு அலுவலகம், அலுவலர்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள தொகுதி. புதிய மேம்பாலங்கள், சாலைகள் என ஜொலிக்கும் தொகுதியின் தீராதப் பிரச்னை கழிவுநீர் வடிகால், போக்குவரத்து நெரிசல்.

முள்ளிவாடி ரயில்வே கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் நான்கு ஆண்டுகளாகியும் முடிவடையாமல் இருக்கிறது.

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் மேட்டூர் அணை, தொகுதியின் எல்லையில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் பிரதானமாக விவசாயமும், மீன்பிடிப்பும் நடைபெறுகிறது.

வேதாந்தா, தனியார் இரும்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளின் காற்று, நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இந்த ஆலைகளை மூடச் சொல்லி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வீரபாண்டி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த தொகுதி இது. தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். முக்கியப் பிரச்னை திருமணிமுத்தாறில் சாயப்பட்டறை கழிவுகள் கலக்கப்படுவதும், தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி பகுதிகளில் இயங்கி வரும் சிறு, சிறு சாயப்பட்டறைகளின் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை இத்தொகுதியின் அரியானூரில் தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஓமலூர்: விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. இங்கு கரும்பு, மஞ்சள், பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதே போல கோரைப்பாய் தயாரிப்பும், கயிறு திரிக்கும் தொழிலும் நடைபெறுகிறது. இவைகளைப் பாதுகாக்க தனிவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது.

களநிலவரம்:

முதலமைச்சரின் சொந்த தொகுதி, முன்னாள் அமைச்சர்களின் தொகுதிகள் என முக்கியத்துவம் பெறும் மாவட்டமாக இருக்கிறது சேலம் மாவட்டம். இங்குள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 9 தொகுதிகளில் அதிமுகவும், 2 திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கான மக்களின் எதிர்ப்பால், அதிக கவனம் பெறும் பகுதியாக சேலம் உருவெடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என மத்திய , மாநில அரசுகள் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், அது அதிமுகவிற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தால் கடந்த தேர்தலில் கிடைத்ததைவிட கூடுதல் இடங்களில் திமுக வெல்லாம். கூட்டணி பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து வரும் நிலையில், தொகுதிகள் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்புகளுக்குப் பின்னர் வெற்றி, தோல்வி கணக்கில் மாற்றங்கள் நிகழலாம் என்றாலும், தொகுதிவாசிகளிடம் அதிமுக செல்வாக்கு இழந்திருப்பது கண்கூடே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.