ETV Bharat / city

சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியீடு!

சேலம்: தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் சங்கம் சேலம் பிரிவு சார்பில் இன்று முதலாம் ஆண்டு விழாவில் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியிடப்பட்டது.

Salem District Tourist Attractions map released
சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியீடு
author img

By

Published : Dec 8, 2019, 7:47 AM IST

சேலத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 10 நாட்கள் சுற்றுலா தினம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சேலத்தில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சுற்றுலா துறையில் மருத்துவ சுற்றுலாவை இணைத்து, சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும் வகையில் திட்டமிட்டு தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து சங்கம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சேலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் சேலம் மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வழிகளை விளக்கும் வரைபடம் வெளியிடப்பட்டது.

சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியீடு

இதன் மூலம் சேலம் மாவட்டத்தின் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை வெளிக்கொண்டுவருவது தங்களுடைய நோக்கம் என்றும் தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து விருந்தோம்பல் சங்கத்தின் சேலம் பிரிவு இயக்குநர் சிவராஜ் கல்பனா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இந்த விழாவில், சேலம் அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Intro:சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் இன்று வெளியிடப்பட்டது.

Body:சேலத்தில் தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் சங்கம் சேலம் பிரிவு சார்பில் இன்று முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவிடும் படம் வெளியிடப்பட்டது.

சேலத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஓர் ஆண்டாக ஒரு வருடமாக தமிழ் நாடு சுற்றுலா போக்குவரத்து சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 10 நாட்கள் சுற்றுலா தினம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் சேலத்தில் நடத்தப்பட்டது . இதன் தொடர்ச்சியாக சுற்றுலா துறையில் மருத்துவ சுற்றுலா சுற்றுலாவை இணைத்து, சேலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும் வகையில் திட்டமிட்டு தமிழ் நாடு சுற்றுலா போக்குவரத்து சங்கம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:இன்று வெளியிடப்பட்ட இந்த சேலம் மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வழிகளை விளக்கும் வரைபடம் ஆனது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சேலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் சேலம் மாவட்டத்தின் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை வெளிக்கொண்டுவருவதும் தங்களுடைய நோக்கம் என்றும் தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து விருந்தோம்பல் சங்கத்தின் சேலம் பிரிவின் இயக்குநர் சிவராஜ் கல்பனா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற இந்த விழாவில், சேலம் அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.