சேலம் மாவட்டத்தில் 297 பேருக்கு கரோனா தொற்று நேற்று (செப். 25) உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் 146 பேரும், எடப்பாடி 2, எடப்பாடி நகராட்சி 3, வீரபாண்டி 13, ஓமலூர் 22, சங்ககிரி 14, மேச்சேரி 5, நங்கவள்ளி 6, காடையம்பட்டி 4, தாரமங்கலம் , கொங்கணாபுரம் 1, மகுடஞ்சாவடி 5, மேட்டூர் 3, ஆத்தூர் 7, ஆத்தூர் நகராட்சி 3, நரசிங்கபுரம் 1, பனமரத்துப்பட்டி 4, பெத்தநாயக்கன்பாளையம் 8, தலைவாசல் 4, அயோத்தியாப்பட்டணம் 6, பேளூர் 7, கெங்கவல்லி 3, என மாவட்டத்தைச் சேர்ந்த 289 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 8 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை 18,005 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவர்களில் 15,106 பேர் சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 2601 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இதுவரை 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.