ETV Bharat / city

புதுயேரி நீர்வரத்து அதிகரிப்பு, தடுப்பணையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர் சிறுமியர் - pudhuyeri lake

சேலம்: ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் புதுயேரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புதுயேரி நீர்வரத்து அதிகரிப்பு
author img

By

Published : Sep 26, 2019, 7:52 PM IST

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இது தவிர ஏற்காட்டில் பெய்யும் மழைநீர், ஏற்காடு மலையடிவாரத்திலுள்ள கற்பகம் கிராமம் அருகிலுள்ள ஓடைகளில் வந்து மூன்று தடுப்பணைகள் நிரம்பிய பின்னர் கன்னங்குறிச்சி அருகிலுள்ள பொது ஏரிக்கு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் புதுயேரிக்கு வெள்ளம்போல் மழைநீர் வரத்தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக புதுயேரி தண்ணீர் இல்லாமல் வறண்டு காய்ந்துக் கிடந்தது. தற்போது பெய்துவரும் மழையால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் பெரியவர்களும், சிறுவர், சிறுமிகளும் குளிக்கிறார்கள்.

தடுப்பணையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர் சிறுமியர்

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி சிறுவர்கள் திரளாக தடுப்பணையில் குளிக்கிறார்கள். இதனால் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து வந்து உயிர்ப்பலி ஏற்படாமலிருக்க கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: வாக்குச்சாவடி எண்ணிக்கை குறைப்பு: அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

Intro:ஏற்காட்டில் தொடர் மழை சேலம் புது ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

தடுப்பணையில் குளியல் போடும் சிறுவர்கள். உயிர்பலி ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் கண்காணிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

Body:ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் சேலம் அருகிலுள்ள புது ஏரிக்கு வெள்ளம்போல் மழைநீர் வரத் தொடங்கியிருக்கிறது. மழையினால் தடுப்பணைகள் சிறுவர் முதல் பெரியவர் வரை குளித்து மகிழ்கின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் மழை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்காடு செல்லும் மலைப்பாதைகளில் திடீர் அருவிகள் தோன்றியுள்ளது. இதுதவிர ஏற்காட்டில் பெய்யும் மழைநீர் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கற்பகம் கிராமம் அருகில் உள்ள ஓடைகளில் வந்து மூன்று தடுப்பணைகளை நிரம்பிய பின்னர் கன்னங்குறிச்சி அருகில் உள்ள பொது ஏரிக்கு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் புது ஏரிக்கு வெள்ளம்போல் மழைநீர் வரத் தொடங்கியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக புது ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு காய்ந்து கிடந்தது. தற்போது பெய்து வரும் மழையால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

ஏற்காட்டில் இருந்து புதுச்சேரிக்கு மழை நீர் வரும் வழிகளில் மூன்று இடங்களில் தடுப்பணைகள் உள்ளது. இந்த தடுப்பு அணைகள் நிரம்பி மழைநீர் புது ஏரிக்கு வருகிறது. இந்த தடுப்பணை பகுதிகளில் பெரியவர்களும் சிறுவர், சிறுமிகளும் குளிக்கிறார்கள்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி சிறுவர்களும் திரளாக தடுப்பணையில் குளிக்கிறார்கள் இதனால் வனத்துறையினர் அவ்வப்போது ரோந்து வந்து உயிர்பலி ஏற்படாமலிருக்க கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.