ETV Bharat / city

‘செல்ஃபி வேண்டாம் ஆபத்தில் முடியும்’ - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சேலம்: மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் தண்ணீரை காணவருபவர்கள் செல்ஃபி எடுக்கக் கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை
author img

By

Published : Sep 7, 2019, 6:33 PM IST

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது

மேட்டூர் அணை இன்று நிரம்பிய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காகச் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மேட்டூர் வந்தார். அப்போது, மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் பகுதியில் பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், “கரையோரமுள்ள உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை மூலமாகத் தாழ்வான பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், மேட்டூர் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் ஆகியன குறித்த தகவல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பகிர்ந்து கொண்டு வருவதாகவும், தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், தண்ணீரைக் காண வரும் மக்கள், அதில் இறங்கிக் குளிக்கவோ, செல்ஃபி எடுத்துக்கொள்ளவோ கூடாது எனவும் கூறினார்.

Intro:மேட்டூர் அணையில் இருந்து நிர் அதிகரிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்டஆட்சியர் ராமன் ஆய்வு.Body:மேட்டூர் அணை விரைவில் நிரம்ப உள்ள நிலையில் காவிரி கரையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது

மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மேட்டூர் வந்தார்.

மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அவர் , அணை நிரம்பியவுடன் தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு அறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119. 65 அடி ஆக உள்ளதாகவும் அணைக்கு 75 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் கால்வாய் பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளதாகவும் மேட்டூர் அணை வரலாற்றில் நாற்பத்தி மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மேட்டூர் அணை எட்ட வாய்ப்புள்ளதாகவும், மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் என்பதால் காவிரிக்கரையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை மூலமாக தாழ்வான பகுதிகளில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேட்டூர் அணையின் நீர்வரத்து நீர் வெளியேற்றும் குறித்த தகவல்களை அனைத்து மாவட்டங்கள் ஆட்சியர்களுடன் பகிர்ந்து கொண்டு வருவதாகவும் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ராமன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.