ETV Bharat / city

உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு உற்சாகத்துடன் கும்பாபிஷேகம்! - உலகின் மிக உயரமான முருகன் சிலை

சேலம் அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு இன்று (ஏப்.6) வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற கும்பாபிஷேக விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
author img

By

Published : Apr 6, 2022, 5:43 PM IST

Updated : Apr 6, 2022, 5:55 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 146 அடி கொண்ட இந்த முருகன் சிலைக்கு இன்று (ஏப்.6) குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த முத்துமலை முருகன் சிலை 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்தது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டு அருள் பெற்று சென்றனர்.

புத்திர கவுண்டம்பாளையத்தில் முத்துமலை முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா முழக்கம் எழுப்பி கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் விண்ணதிர முழக்கமிட்டு வழிபாடு செய்தனர். மலேசிய நாட்டின் பத்துமலையில் 140 அடி உயரத்தில் முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் புதிய மைல்கல்லாக 146 அடி உயர முருகன் சிலையை தற்போது அமைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் பங்குனி உத்திரத் திருவிழா

Last Updated : Apr 6, 2022, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.