ETV Bharat / city

50 சவரன் தங்க நகைகள் மாயம் - சேலத்தில் தொடரும் கைவரிசை!

author img

By

Published : Feb 7, 2020, 1:42 PM IST

சேலம்: ரயில்வே அலுவலரின் வீட்டிலிருந்து 50 சவரன் தங்க நகைகளையும் 15 ஆயிரம் ரொக்கத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

theft in salem
theft in salem

சேலம் சூரமங்கலம் அருகேவுள்ள சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் முன்பதிவு அலுவலராக பணியாற்றிவருபவர் பிரசாத். இவர் சூரமங்கலம் அருகேவுள்ள முல்லை நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

இவரது உறவினர் இல்லத் திருமணம் சென்னையில் நடந்தது. இதற்காக பிரசாத் குடும்பத்துடன், இருநாள்களுக்கு முன் சென்னை சென்றனர். நேற்று வீடு திரும்பிய பிரசாத் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் தங்க நகைகளும் ரொக்கம் 15 ஆயிரம் மாயமாகியிருந்தது.

இது குறித்து பிரசாத், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி உதவி கமிஷனர் பூபதிராஜன், ஆய்வாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்துள்ளார்.

சேலத்தில் 50 சவரன் தங்க நகைகள் மாயம்

சேலத்தில் கடந்த ஒரு மாத காலமாக வீடுகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் திருட்டுக்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு!

Intro:சேலத்தில் ரயில்வே அதிகாரியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 50 சவரன் தங்க நகைகள் 15 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்று உள்ளனர்.
Body:
சேலம் சூரமங்கலம் அருகே சேலம் ரயில்வே கோட்டம் உள்ளது .
இங்கு டிக்கெட் முன்பதிவு அதிகாரியாக பணியாற்றி வருபவர் பிரசாத்.
இவர் சூரமங்கலம் அருகில் உள்ள முயல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது உறவினர் இல்லத்திருமணம் சென்னையில் நடந்தது.
இதனால் அதிகாரி பிரசாத்தும் ,
அவரது குடும்பத்தினரும் நேற்று முன்தினம் சென்னை சென்றனர் .
இன்று அதிகாலை வீடு திரும்பிய பிரசாத் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு திருடர்கள் உள்ளே புகுந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டு பீரோதிறந்து கிடந்தது. இதில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் 15 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

பிறகு இது குறித்து பிரசாத் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் அதிகாரி பிரசாத் புகார் செய்தார். இதன் பேரில் உதவி கமிஷனர் பூபதிராஜன் , ஆய்வாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை செய்தனர்.
அதிகாரி பிரசாத் அவரது மகளின் திருமணத்திற்காக தங்க நகைகள் 50 சவரன் வாங்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த திருட்டில் துப்பு துலங்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உள்ளார் .இதில் துணை கமிஷனர் செந்தில் மற்றும் ஆய்வாளர்கள் பலர் இடம் பெற்று விசாரணை செய்துவருகிறார்கள்.

சேலத்தில் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு நடந்து வருகிறது. ஆனால் இதுவரை திருடர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.