சேலம்: எடப்பாடியைச் சேர்ந்தவர் வேல் சத்ரியன். இவர் சேலம் 5 ரோடு அருகேவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். அவ்வீட்டிலேயே போட்டோ ஸ்டுடியோ அமைத்து புகைப்படத் தொழில் நடத்தி வந்திருக்கிறார். இந்த ஸ்டூடியோவிற்கு வேல் சத்ரியன், சினிமாவில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி அழைத்து ஆபாசம் படம் எடுத்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இதனையடுத்து, வேல் சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. பின்னர், வேல் சத்ரியன் சேலம் மத்திய சிறையிலும், ஜெயஜோதி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வேல் சத்ரியன் மீது பல்வேறு ஊர்களிலிருந்து சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் வந்ததுள்ளது. தங்களிடம் வேல் சத்ரியன் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பணம் பெற்று திருப்பி தரவில்லை என புகார்கள் குவிந்தன. இதனால், சேலம் சூரமங்கலம் காவல் துறையினர் உதவி கமிஷன் நாகராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வேல் சத்ரியன் போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்று அறையை திறந்து சோதனை செய்தனர்.
அப்போது ஸ்டூடியோவின் அறையின் சுவற்றில் பல்வேறு புகைப்படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. இதில் பல்வேறு நடிகர்களுடன் வேல் சத்ரியன் இணைந்து இருப்பது போல புகைப்படங்கள் இருந்தது. இதனை பார்த்து காவல் துறையினர் அதிர்ச்சியந்தனர்.
பின்னர் வேல் சத்ரியன் பயன்படுத்திய மூன்று அறைகளையும் திறந்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதை வைத்து தற்போது காவல் துறையினர் விசாரணை நடட்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சத்துடன் மாயமான கார் ஓட்டுநர்