ETV Bharat / city

அரசுப் பள்ளி ஆசிரியரை மிரட்டி லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர்

சேலம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை, அத்துமீறிப் பயன்படுத்தியதாகக் கூறி, அரசுப் பள்ளி ஆசிரியரை மிரட்டி, லஞ்சம் பெற முயன்றதாக வனச்சரகர் உள்பட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்மம்பட்டி
தம்மம்பட்டி
author img

By

Published : Dec 28, 2021, 9:55 PM IST

சேலம்: கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள நரிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர், தேவேந்திரன். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய சிறுவாத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

நரிப்பாடியில் தனது நிலத்தில் தேவேந்திரன், கடந்த 2019ஆம் ஆண்டு டிராக்டர் மூலம் உழவு செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மண்ணில் புதைந்தது.

லஞ்சம் கேட்ட அலுவலர்கள்

இதனையடுத்து டிராக்டரை மீட்க, நிலத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி மண்ணில் புதையுண்ட டிராக்டரை தேவேந்திரன் மீட்டுள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்த வனத்துறையினர், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக தேவேந்திரன் மீது அப்போது புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ரூ.50 ஆயிரம் லஞ்சம் தருமாறு வனக்காப்பாளர் கிருஷ்ணராஜ், வனக்காவலர் மணிவேல் ஆகியோர் ஆசிரியர் தேவேந்திரனிடம் செல்போன் மூலம் பேரம் பேசி உள்ளனர்.

ஆசிரியர் தேவேந்திரன்

தாக்குதல் நடத்திய அலுவலர்கள்

அதனை தேவேந்திரன் தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு, தம்மம்பட்டி வனச்சரகர் அலுவலகத்துக்கு தேவேந்திரன் சென்றபோது அவரை அலுவலக அறையில் அடைத்து வைத்து தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து தப்பிய தேவேந்திரன், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனிடையே வனத்துறை நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக தேவேந்திரன் உள்பட மேலும் இருவர் மீது ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக, தேவேந்திரன் சேலம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். தற்போது இப்புகாரின் பேரில், தம்மம்பட்டி வனச்சரகராக இருந்த அசோக்குமார், ஓய்வு பெற்ற வனக்காப்பாளர் கிருஷ்ணராஜ், மறைந்த வனக்காவலர் மணிவேல் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Document Writer Welfare Finance Commission: ஆவண எழுத்தாளர் நல நிதி ஆணையம் உருவாக்கி அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.