தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 53 ஆயிரத்து 675 ஆண்களும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 036 பெண்களும் என மொத்தம் 29 லட்சத்து 07 ஆயிரத்து 849 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 252 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்து கொள்ளவும், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யவும் இன்று முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பிப்ரவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!