ETV Bharat / city

சேலம் மாநகராட்சியில் நிலவேம்பு கஷாயம் தந்த திமுகவினர்!

author img

By

Published : Oct 30, 2019, 10:32 AM IST

Updated : Oct 30, 2019, 1:44 PM IST

சேலம்: திமுகவினர் சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும் நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் தந்த திமுகவினர்!

சேலம் மாவட்டத்தில் மிக வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று வேகமாகப் பரவி வரும் காய்ச்சலை தடுத்திட மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திமுக தலைவர் அறிவுறுத்தலின் படி, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, கிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

சேலத்தில் திமுக சார்பில் டெங்கு விழிப்புணர்வு

இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உள்பட பொது மக்களுக்கு நில வேம்பு குடிநீரை வழங்கினார். மேலும் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு அறிக்கையை பொது மக்களுக்கு விநியோகித்து, மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.

முன்னதாக அவர் பேசுகையில், சேலத்தில் சுகாதார துறைக்கு ஒதுக்கபடும் நிதி அனைத்தும் மக்களுக்கு பயன்படுத்தாமல் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு சென்றடைவதாகக் குற்றம் சுமத்தினார். மேலும் தமிழ்நாட்டில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதற்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்டிட வேண்டும் எனவும் பேசினார். இந்நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் சுபாசு, மாநில தீர்மான குழு உறுப்பினர் தாமரை கண்ணன், கிச்சிபாளையம் பகுதி செயலாளர் ஜெய், மத்திய மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க:

36 மில்லியன் இந்தியர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - அதிர்ச்சி தகவல்

Intro:சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கபட்டது.. சேலம் மாநகரில் மிக வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கையேட்டை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் பொது மக்களுக்கு வழங்கினார்.Body:
சுகாதார துறைக்கு ஒதுக்கபடும் நிதி, மக்களுக்கு செலவழிக்க படாமல் சம்மந்தபட்ட துறை அமைச்சருக்கு சென்றடைவதாக குற்றசாட்டு... மக்களை பற்றி சிந்திக்காத அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று வேண்டுகோள்..

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சேலம் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று வேகமாக பரவி வரும் காய்ச்சலை தடுத்திட மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திமுக தலைவர் அறிவுறுத்தலின் படி, சேலம் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி மற்றும் கிச்சிபாளையம் பகுதி திமுக சார்பில் நில வேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, கிச்சிபாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உள்பட பொது மக்களுக்கு நில வேம்பு குடிநீரை வழங்கினார். மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு அறிக்கையை பொது மக்களுக்கு விநியோகித்து, மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படியும், சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார். முன்னதாக அவர் பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக சேலத்தில் சுகாதாரத்துறை என்பது இல்லாத நிலை தான் உள்ளதாகவும், சுகாதார துறைக்கு ஒதுக்கபடும் நிதி அனைத்தும் மக்களுக்கு பயன்படுத்தாமல் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு சென்றடைவதாக குற்றம் சுமத்தினார். மேலும் தமிழகத்தில் மக்களை பற்றி கவலை படாத ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இதற்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்டிட வேண்டும் என்றும் பேசினார். நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் சுபாசு, மாநில தீர்மான குழு உறுப்பினர் தாமரை கண்ணன், கிச்சிபாளையம் பகுதி செயலாளர் ஜெய், மத்திய மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.Conclusion:
Last Updated : Oct 30, 2019, 1:44 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.