ETV Bharat / city

நண்பர் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் : முத்தரசன்

author img

By

Published : Dec 20, 2020, 2:35 PM IST

சேலம்: நண்பர் ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நண்பர் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் : முத்தரசன் ஆதரவு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை இன்று (டிச. 20) சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எந்த ஒரு உதவியும் இதுவரை செய்யவும் இல்லை. ஆனால் தற்பொழுது பொங்கல் பரிசாக ரூ. 2500 ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு என்பது யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்ற பழமொழிக்கு ஏற்ப தேர்தல் வருகின்றபொழுது இந்த அறிவிப்பை அறிவித்திருக்கிறார் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

மக்களுக்கு அரசாங்க பணத்தை மக்களின் வரி பணத்தை அவர்களுக்கு கொடுத்து வாக்குகளை தனக்கு வழங்க வேண்டும் என்ற அறிவிப்பாகவே இது உள்ளது. அரசு பணத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற முதலமைச்சர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது” என்றார்.

மேலும் பேசிய அவர், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவைவிட திமுக தலைமையிலான அணி 8000 வாக்குகள் அதிகம் பெற்று இருப்பதுகூட தெரியாமல் முதலமைச்சர் எஃகு கோட்டை என பேசி இருப்பது அவரின் அறியாமையை காட்டுகிறது. ரஜினிகாந்த் குறித்து நான் தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. ரஜினி எனக்கு ஒரு நல்ல நண்பர். முதலில் அவர் கட்சியை ஆரம்பிக்கட்டும். தனது கொள்கை என்ன என்று அறிவிக்கட்டும் . அதன் பிறகு அவரைப் பற்றி பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...டிச.23 முதல் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.