சேலம்: கரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடைபயணம்
குறிப்பாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசும், தன்னார்வ அமைப்பினரும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல்துறை சார்பில் சூரமங்கலம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் நஞ்முல் ஹோதா தலைமையில் சேலம் ஜங்சன் பகுதியிலிருந்து சூரமங்கலம், சோனா கல்லூரி ஏவிஆர் ரவுண்டானா , 5 ரோடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று முக் கவசம் அணியாத நபர்களுக்கு முகக் கவசம் வழங்கினார்.
சாலையோரம் உள்ள ஆதரவற்றோருக்கு முகக் கவசம் மற்றும் பண உதவியும் அவர் வழங்கினார்.
புகார் செய்ய தயங்காதீர்கள்
அதனைத் தொடர்ந்து, சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவன பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் ரவுடிகள் மற்றும் குண்டர்களின் அச்சுறுத்தல் ஏதேனும் இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 120 வட்டார கல்வி அலுவலர் பணியிடம் ஜன. 24ஆம் தேதிக்குள் நிரப்ப திட்டம்