ETV Bharat / city

எடப்பாடி காளியம்மன் கோயில் குடமுழுக்கு! - முதலமைச்சர் பங்கேற்பு! - எடப்பாடி

சேலம்: எடப்பாடி ஒம் காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு வழிபட்டார்.

function
function
author img

By

Published : Jan 25, 2021, 12:38 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில், 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஒம் காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். அப்போது அவரை கும்ப மரியாதை கொடுத்து கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதற்காக கடந்த 17ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு அன்று முதல் தினசரி மங்கல இசை முழங்க பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து குடங்களில் தீர்த்த நீர் எடுத்து வரப்பட்டு, புனித அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

எடப்பாடி காளியம்மன் கோயில் குடமுழுக்கு! - முதலமைச்சர் வழிபாடு!

குடமுழுக்கின் இறுதியாக முதலமைச்சர் தலைமையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் கொண்டு நீராட்டு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி வழிபாடு மேற்கொண்டனர். முதலமைச்சர் வருகையையொட்டி, கோயிலை சுற்றி அனைத்து பகுதிகளிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சிறுபான்மை மக்கள் மீது வழக்கு : திமுக கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.