ETV Bharat / city

‘எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது’ - சவால் விடும் சேலம் அமமுக வேட்பாளர்!

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை எந்தக் கட்சியும் விலைக்கு வாங்க முடியாது என அக்கட்சியின் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.

salem
author img

By

Published : Mar 26, 2019, 4:49 PM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், இன்று மட்டும் சேலம் மாவட்டத்தில் 18 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வகையில், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம்,

“எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பது இழப்பில்லை. சொல்லப்போனால் எந்த சின்னம் எங்களுக்கு வழங்கப்பட்டாலும் வாக்காளர்கள் மத்தியில் அதை கொண்டு சேர்ப்பது எங்களுக்கு எளிதான ஒன்று.

திமுக முடிந்துபோன கட்சி. அதிமுக துரோகிகளின் கட்சி. மக்களுக்கு சேவை செய்வது என்பதே எங்களின் இலக்கு. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம். அமமுக வேட்பாளர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Intro:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை எந்தக் கட்சியும் விலைக்கு வாங்க முடியாது என்று, அக்கட்சியின் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.

Body:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களை எந்தக் கட்சியும் விலைக்கு வாங்க முடியாது என்று, அக்கட்சியின் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கே.செல்வம் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த19ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இன்று இறுதி நாள் என்பதால் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்தனர். இன்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கே. செல்வம் உட்பட 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.கே. செல்வம்," எங்களுக்கு குக்கர் சின்னம் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் இழப்பில்லை.

சொல்லப்போனால் எந்த சின்னம் எங்களுக்கு வழங்கப்பட்டாலும் வாக்காளர்கள் மத்தியில் அதை கொண்டு சேர்ப்பது எளிதான விஷயம். ஒரு நொடியில் எல்லா வாக்காளர்கள் மனதிலும் எங்களின் சின்னம் பதிந்து விடும்.

எனவே நாங்கள் தான் வெற்றி வேட்பாளர்கள். சேலம் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் நாங்கள் யாரையும் போட்டியாக கருதவில்லை.

திமுக முடிந்துபோன கட்சி. அதிமுக துரோகிகளின் கட்சி . மக்களுக்கு சேவை செய்வது என்பதே எங்களின் இலக்கு . எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்.

தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் களத்தில் துடிப்புடன் செயல்படுகிறார்கள் . எங்களை யாரும் விலைக்கு வாங்கிவிட முடியாது . நாங்கள் தான் வெற்றி பெறப் போகிறோம்.

எந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டாலும் அதை உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்.

சேலத்தில் இதற்கென 10 வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை நாங்கள் நியமித்து விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களாக திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 37 பேர் களத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.