ETV Bharat / city

'ஓப்பனாக பேசவேண்டும்' பெற்றோருக்கு ஓவியா அட்வைஸ்

author img

By

Published : Apr 29, 2022, 6:13 PM IST

Updated : Apr 29, 2022, 6:59 PM IST

பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குறித்த பாடத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்தார்.

நடிகை ஓவியா
நடிகை ஓவியா

சேலம்: களவாணி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஓவியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இதனிடையே நடிகை ஓவியா தனது 31ஆவது பிறந்தநாளை சேலத்தில் கொண்டாடினார். தனியார் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போது மாணவர்களுடன் கேக் வெட்டி ஆரவாரத்துடனும், ஆட்டம்பாட்டத்துடனும் உற்சாகமாக கொண்டாடினார்.

'ஓ சொல்றியா மாமா..' பாடலுக்கு நடனம்: அப்போது மேடையில் 'ஓ சொல்றியா மாமா..' உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு மாணவிகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். இதனை ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள் ஆரவாரத்துடன் கைதட்டியும் விசிலடித்தும் கொண்டாடினர்.

நடிகை ஓவியாவின் 31ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓவியா, "தமிழ்நாடு மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களின் ஆதரவால், இந்த நிலையை அடைந்துள்ளேன். பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மட்டுமே சொல்லிக்கொடுக்கிறார்கள். எனவே வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும்.
ஓப்பனாக பேச வேண்டும்: பெற்றோர் தங்களது ஆண் பிள்ளைகளிடம் கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மூடி வைக்காதீர்கள். மறைக்காதீர்கள். ஓப்பனாக பேசுங்கள். அப்போதுதான் பெண்களுக்கு எதிாரான வன்முறைகளுக்கு தீர்வு கிடைக்கும். எல்லோரும் சந்தோசமாக இருங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. எதிர்காலத்தை நினைத்து வாழாமல் இன்றைய நாளை சந்தோஷமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நான் அட்வைஸ் பண்ண வில்லை.

ஒரே சம்பளம்: தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பள தொகையை போலவே நடிகைகளுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தக் காலத்தில் சம உரிமை இல்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. பெண்களுக்குக் கல்வி வழங்க வேண்டும். ஆண்-பெண் சமம் என்ற உணர்வை சிறுவயதிலிருந்து கொண்டு வரவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்

Last Updated : Apr 29, 2022, 6:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.