ETV Bharat / city

இரு நாள்களில் 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்! - சேலம் தற்போதைய செய்தி

சேலம்: உரிய அங்கீகாரமில்லாமல் இயங்கிவந்த 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

30 water plants sealed in Salem
30 water plants sealed in Salem
author img

By

Published : Mar 1, 2020, 6:49 PM IST

சேலம் மாவட்டம் முழுவதும் முறையாக அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, சேலம் கோட்டாட்சியர் மாறன் தலைமையில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இணைந்து நேற்று முதல் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துவருகிறார்கள்.

இரண்டாவது நாளாக இன்று காலை சேலம் மாநகராட்சிப் பகுதியிலுள்ள குரங்குச்சாவடி பகுதியில் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அங்கு சுத்திகரிப்பு நிறுவனம் உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

இரு நாள்களில் 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்!

இதுபோல சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி இயங்கிவந்த 30 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதே போல மேலும் 20 நிறுவனங்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நேற்று 10 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 20 நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகி மர்ம மரணம்: கிணற்றில் மிதந்த உடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.