ETV Bharat / city

'பருத்திப்பால் வியாபாரியான எம்.காம்., பட்டதாரி' - 3 தலைமுறையின் பாரம்பரியம் - madurai paruthi paal shop

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மதுரை வரும்போதெல்லாம் இவரது கடைக்கு வந்து பருத்திப்பாலை அருந்திவிட்டு தான் செல்வார். எம்.காம். பயின்றாலும் மூன்று தலைமுறைகளாக மேற்கொண்டு வரும் பாரம்பரிய பருத்திப்பால் வியாபாரத்திற்குத் திரும்பிய கோவிந்தராஜனின் மேற்பார்வையில் வெற்றி நடைபோடுகிறது திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை.

திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை

author img

By

Published : May 27, 2021, 11:04 PM IST

மதுரை முனிச்சாலை பகுதியில் 90 ஆண்டுகளுக்கு மேல் பருத்திப் பாலுக்கு என்றே பெயர் பெற்ற திருமலை மடைக்கருப்பசாமி கடையின் உரிமையாளர். மதுரையில் ஜிகர்தண்டா எவ்வளவு பிரசித்தமோ அந்த அளவிற்கு பிரசித்தி பெற்றது இந்தக் கடையின் பருத்திப்பால். கடந்த 1930ஆம் ஆண்டு கோவிந்தராஜனின் தாத்தா கருப்பையாவால் தொடங்கப்பட்டு, இன்று வரை அப்பகுதியில் வெற்றி நடைபோடுகிறது. இந்தக் கடையின் பருத்திப்பாலை ஒருமுறை அருந்தியவர்கள் பிறகு இதன் நிரந்தர வாடிக்கையாளராக மாறிவிடுவதுதான் அதிசயம். பாரம்பரிய சுவை மாறாமல், வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிவதையே நோக்கமாகக் கொண்டு கால் லிட்டர் பருத்திப்பாலை, வெறும் ரூ.15-க்கு வழங்குகின்றனர். பகல் முழுவதும் பருத்திப்பால் கிடைத்தாலும்கூட, மாலை 5 மணிக்கு மேல் திரள்கின்ற கூட்டம் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். செம்புப் பானை நிறைய கொண்டு வரப்படும் பருத்திப்பால், பல்வேறு மூலிகைக் கலவைகளோடு வாடிக்கையாளரின் தேவையை அறிந்து இரவு 10 மணி வரை வழங்கப்படுகிறது.

பருத்திப் பால் செய்வது எப்படி?

இதுகுறித்து கோவிந்தராஜன் கூறுகையில், "எம்.காம் முடித்துவிட்டு சென்னையில் ஐடி துறையிலும், பிறகு மதுரை டிவிஎஸ் நிறுவனத்திலும் பணியாற்றினேன். பிறகு தந்தையார் அறிவுறுத்தலின் காரணமாக எங்களது பாரம்பரிய பருத்திப்பால் தொழிலில் நானும் இறங்கினேன். 90 ஆண்டு பாரம்பரியம், இன்னும் பத்தாண்டுகளைக் கடந்துவிட்டால் நூற்றாண்டுப் பெருமை எங்கள் கடைக்கு உண்டு. பருத்திப்பாலை நன்கு ஊறவைத்து ஆட்டி அதிலிருந்து கிடைக்கும் பாலை பசும்பால் போல நன்கு காச்ய்சி, ஆட்டிய பச்சரிசியையும் கலந்து கருப்பட்டியைக் காய்ச்சி ஊத்திவிடுவேன். பின் மிதமான சூட்டில் தொடர்ச்சியாக வைத்துக்கொள்வேன் வாடிக்கையாளர்கள் பருகும்போது ஏலக்காய், திப்பிலி உள்ளிட்ட பொருள்களைக் கலந்து சுடச்சுட சூடான பருத்திப்பாலை அவர்கள் கையில் கொடுத்துவிடுவேன்." என்கிறார்.

'கமகமக்கும் மதுரை பருத்திப்பால்'- 3 தலைமுறையின் பாரம்பரியம்

பருத்திப்பால் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரியப் பொருட்களையே இங்கு பயன்படுத்துகின்றனர். கலப்படத்திற்கு சிறிதும் இடம் கொடுப்பதில்லை. பருத்திக்கொட்டையிலிருந்து பால் எடுத்து, பனை வெல்லம், சித்தரத்தை, திப்பிலி, சுக்கு, ஏலக்காய், பச்சரிசி மற்றும் தேங்காய்ப்பூ ஆகியவையே பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மருத்துவ குணம் மிக்கவை என்கிறார் கோவிந்தராஜன்.

'ஒரு தடவைதான் வந்தேன். இப்போ டெய்லி கஸ்டமர்'

தாத்தா, தந்தையார் பார்த்து வந்த இந்தத் தொழிலை விட்டுவிட்டு முதுகலை வணிகவியல் படித்து, சென்னை டைடல் பார்க்கில் பணி புரிந்து வந்த கோவிந்தராஜன், தனது குடும்பப் பாரம்பரியத்தைக் காக்க தானும் பருத்திப்பால் வியாபாரியாக மாறியிருக்கிறார் என்பது வியப்புதான். முனிச்சாலையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஸ்ரீதரன் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளாக இந்தக் கடையில் பருத்திப்பால் அருந்தி வருகிறேன். இங்கு கிடைப்பதைப் போன்று வேறு எங்கும் பருத்திப்பால் கிடைப்பதில்லை. வாடிக்கையாளர்களிடம் தந்தையும், மகனும் காட்டும் பணிவும், அன்பும் மிக அலாதியானது. நாள்தோறும் வந்து அருந்திச் செல்வதுடன் வீட்டிற்கும் வாங்கிச் செல்வது எனது வழக்கம்" என்கிறார்.

அரையணா தொடங்கி 15 ரூபாய் வரை:

தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மிகப் பணிவோடு இவர்கள் நடந்து கொள்வதே பெரும்பாலானோரை ஈர்த்துவிடுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் தனது கடையின் முன்பாக தள்ளுவண்டியில் கொண்டு வரும் பருத்திப்பால் விற்பனையை தொடங்குவதற்கு முன்பாக இறைவணக்கம் செலுத்திவிட்டே தொழிலைத் தொடங்குகிறார் கோவிந்தராஜன். கோவிந்தராஜனின் தந்தையார் சந்தானம் கூறுகையில், "அரையணா, காலணா விலையில் பருத்திப்பால் வழங்கி வந்த நாங்கள், தாக்குப்பிடிக்க முடியாத விலைவாசி உயர்வின் காரணமாக தற்போது ரூ.15-க்கு வழங்க வேண்டிய நிலை. ஆனாலும் மக்களுக்கு மிகத் தரமான பானத்தை வழங்குகிறோம் என்பதில் எங்களுக்குப் பெருமை. சித்தர்கள் காட்டிய வழியில்தான் பருத்திப்பாலை மூலிகைகள் கலந்து வழங்கி வருகிறோம்" என்கிறார்.

திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை
திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை

டி.எம்.சௌந்தரராஜனுக்கு பிடித்த கடை:

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மதுரை வரும்போதெல்லாம் தங்களது கடையின் பருத்திப்பாலை மிகவும் விரும்பி அருந்தியதை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சந்தானம். வள்ளலாரின் வழியே தங்களின் வழி என்று சொல்லும் சந்தானம், வாடிக்கையாளரின் முகம் கோணாமல் சேவையாற்றுவதே கடவுளுக்குச் செய்யும் தொண்டாகக் கருதுகிறார். 'செய்யும் தொழிலே தெய்வம்' எனும் முதுமொழிக்கு ஏற்ப, தங்களது பருத்திப்பால் கடையையே கோயிலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறது கோவிந்தராஜனின் குடும்பம். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதுடன், மேலும் அதிகரிக்கும் வாடிக்கையாளர்களையும் முகம் கோணாமல் உபசரித்து மகிழ்கின்றனர். திருமலை மடை கருப்பசாமி பருத்திப்பால் கடை, மதுரையின் பாரம்பரியமிக்க உணவு அடையாளங்களுள் ஒன்று என்றால் அது மிகைச்சொல் அன்று...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.