ETV Bharat / city

பெண் சிசுக்கொலை: போலீசாரின் அதிரடி நடவடிக்கை - Woman infanticide

மதுரை: சோழவந்தானில் 4 நாள்கள் ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே குழந்தையின் தந்தை, பாட்டி கைது செய்யப்பட்டதையடுத்து இன்று குழந்தையின் தாய், அத்தை ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் சிசுக்கொலை: போலீசாரின் அதிரடி நடவடிக்கை

author img

By

Published : May 17, 2020, 9:26 PM IST

Updated : May 18, 2020, 4:53 PM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான், பூ மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ரா தவமணி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 10ஆம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவமாக நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சந்தேகமான முறையில் இறந்து விட்டதாகக் கூறி கடந்த 11ஆம் தேதி அப்பகுதியில் உள்ள முட்புதரில் உடலை புதைத்ததாக தெரிகிறது.

இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், நேற்று (மே 16) குழந்தையை கொலை செய்து புதைத்து விட்டதாக சோழவந்தான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

சோழவந்தானில் பெண் சிசுக்கொலை: தந்தை, பாட்டி கைது

மருத்துவ அறிக்கையில் குழந்தைக்கு கள்ளிபால் கொடுத்து கொலை செய்திருப்பது உறுதியானதையடுத்து, குழந்தையின் தந்தை தவமணி, பாட்டி பாண்டியம்மாள் ஆகிய இருவரையும் சோழவந்தான் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் தாய் சித்ராவிடம் கூட தெரிவிக்காமல் கள்ளிப்பால் கொடுத்ததும், இதை மறைத்து இயற்கையாக குழந்தை இறந்தது போல் நாடகமாடியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து, இன்று (மே 18) காவல்துறையினரின் ஆணைக்கு இணங்க குழந்தையின் தாய் சித்ரா, அத்தை முத்துலட்சுமி (தவமணியின் சகோதரி) ஆகியோர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க;

பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!

Last Updated : May 18, 2020, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.