கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், கபசுரக் குடிநீர் வழங்குதல், நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் ஹோமியோபதி மருந்துகளை வழங்குதல் என பல்வேறு முயற்சிகளை மதுரை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையர் விசாகன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, முகக் கவசம் இல்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு மாநகராட்சியின் சுகாதாரத் துறை அலுவலர்கள் ரூ.100 அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க:எலக்ட்ரானிக் முகக்கவசம்... முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு