ETV Bharat / city

கீழடி 5ஆம் கட்ட அகழாய்வில் தொட்டி கண்டுபிடிப்பு! - Keezhadi 5th excavation

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழாய்வில், சுட்ட செங்கற்களால் ஆன தொட்டி போன்ற அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கீழடி 5ஆம் கட்ட அகழாய்வில் தொட்டி கண்டுபிடிப்பு!
author img

By

Published : Aug 27, 2019, 5:19 PM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பகுதியிலுள்ள கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணி இந்திய தொல்லியல் துறை சார்பாகவும், நான்காவது கட்ட அகழாய்வுப் பணி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாகவும் நடைபெற்றது.

தற்போது ஐந்தாவது கட்ட அகழாய்வுப் பணியானது கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை விட இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணியில் தொல்லியல் சின்னங்கள் அதிகமாக கிடைக்கலாம் என்று தொல்லியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரண்டு பக்க மதில் சுவர் போன்ற ஒரு அமைப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து உறை கிணறு, நெசவாளர்கள் பயன்படுத்தக்கூடிய தக்கிலி போன்ற அமைப்பும், சுடுமண்ணால் ஆன பொருட்களும் ஏராளமாக இங்கே கண்டறியப்பட்டுள்ளன. மேலும், சுடுமண்ணால் ஆன மனித, விலங்கு முக சிற்பங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி 5ஆம் கட்ட அகழாய்வில் தொட்டி கண்டுபிடிப்பு!

தற்போது இரண்டடி உயரமுள்ள சுட்ட செங்கலால் ஆன தொட்டி போன்ற அமைப்பு ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை 40 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 650க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Intro:கீழடி 5ஆம் கட்ட அகழாய்வில் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சுட்ட செங்கற்களால் ஆன சங்ககால வடிவமைப்பு ஒட்டிய தொட்டி போன்ற அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
Body:கீழடி 5ஆம் கட்ட அகழாய்வில் தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சுட்ட செங்கற்களால் ஆன சங்ககால வடிவமைப்பு ஒட்டிய தொட்டி போன்ற அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி, தமிழகத் தொல்லியல் துறையால் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
சதுர வடிவிலான சுட்ட செங்கல்லால் அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பகுதியிலுள்ள கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன
முதல் மூன்று கட்ட அகழாய்வு பணி  இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது. தொடர்ந்து நான்காவது கட்ட அகழாய்வு பணி தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது.

தற்போது ஐந்தாவது கட்ட அகழாய்வுப் பணியானது கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை நடை பெற்று வருகிறது.

கடந்த நான்கு கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் கிடைக்கப்பெற்ற பொருட்களை விட இந்த ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில் தொல்லியல் சின்னங்கள் அதிகமாக கிடைக்கலாம் என்று தொல்லியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரண்டு பக்க மதில் சுவர் போன்ற ஒரு அமைப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உறை கிணறு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நெசவாளர்கள் பயன்படுத்தக்கூடிய தக்கிலி போன்ற அமைப்பும்  சுடுமண்ணால் ஆன பொருட்களும்  ஏராளமாக இங்கே கண்டறியப்பட்டுள்ளன.
சுடுமண்ணால் ஆன மனித, விலங்கு முக சிற்பங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இரண்டடி உயரமுள்ள சுட்ட செங்கலால் ஆன தொட்டி போன்ற அமைப்பு ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை 40 குழிகள் தோண்டப்பட்டு உள்ள நிலையில் 650க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.