மதுரை: சிறப்பு ரயில்களில் இருக்கை வசதி பெட்டிகளுக்கும் முன்பதிவு செய்வது அவசியமாக இருந்துவந்தது.
தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் வண்டி எண் 02628/02627 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 06850/06849 ராமேஸ்வரம் - திருச்சிராப்பள்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் ஆகியவற்றிலுள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகளுக்கு, பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்யும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, நவம்பர் 10 முதல் வண்டி எண் 06321/06322, நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்களில் உள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகள் எடுத்து பயணம் செய்யலாம் என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தித் திணிப்பை ஆதரித்த ஆடிட்டர் சங்கத் தலைவர்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்