மதுரை: சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஏழு பேர் விடுதலை
அப்போது, தமிழ்நாட்டில் முருகன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலை குறித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம் என தீர்ப்பு வழங்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வைகோ, “இதற்கு முன்பாகவே தூக்குத் தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது இவர்களை விடுதலை செய்யலாம் என தீர்ப்பும் வழங்கப்பட்டது.
உடனே மாநில அரசு மூன்றே நாளில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநரிடம் அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதை குப்பையில் போட்டுவிட்டார்.
சமூகநீதி
ஏழு பேரை விடுதலை செய்வதற்கு, ஒன்றிய அரசு தடையாக இருக்கிறது. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய சமூகநீதி ஆகும்” என வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனையாளர் ஸ்டாலின்! - வைகோ