ETV Bharat / city

சுயேட்சையாக களமிறங்கும் கொலை குற்றவாளி..! - சுயேட்சை வேட்பாள

மதுரை: பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மோகன் என்பவர், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

crime
author img

By

Published : Mar 26, 2019, 3:12 PM IST

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். கட்டிட தொழிலாளியாக பணியாற்றிவரும் இவர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, அரசு பேருந்தை உடைத்தது, கொலை மற்றும் கொலை முயற்சி, கூட்டுச்சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, மேல் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள இவர், இதுவரை தான் எந்தப் பிரிவின் கீழும் தண்டனை பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக நமது ETV பாரத்திற்கு தொலைபேசி வழியாக மோகன் அளித்த பேட்டியில், “என் மீது காவல்துறையினரால் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. மதுரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் நான் தற்போது மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Intro:கொலைக் குற்றத்தில் தொடர்புடையவர் மதுரை மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு

Body:அனைத்து விதமான குற்ற வழக்குகளையும் கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கருதப்படும் மதுரை அனுப்பானடி சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் மோகன் என்பவர் மதுரை மக்களவைக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

மதுரை அனுப்பானடி சேர்ந்த மோகன் என்பவர் மதுரை தொகுதி தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜனிடம் வேட்பு மனு செய்துள்ளார் இவர் மீது மதுரை அவனியாபுரம் விளக்குத்தூண் திருப்புவனம் தெப்பக்குளம் மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன

பெட்ரோல் குண்டு வீசியது அரசு பேருந்தை உடைத்தது கொலை மற்றும் கொலை முயற்சி கூட்டுச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் இதுவரை எந்தப் பிரிவின் கீழும் இவர் தண்டனை பெறவில்லை என்பதையும் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்

கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இதுகுறித்து நமது etv பாரத்திற்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் என் மீது காவல்துறையினரால் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை மதுரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில்தான் நான் தற்போது மதுரை மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன் செய்துள்ளேன் என்றார்

மோகனின் நிழல்படத்தை எஃப்டிபியில் அனுப்பியுள்ளேன் l

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.