ETV Bharat / city

‘மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்பவர்களே ஆட்சிக்கு வர வேண்டும்’ - நர்த்தகி நட்ராஜ் - thirunanga

மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் ஆட்சி நடத்துபவர்களே அதிகாரத்திற்கு வர வேண்டும் என பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் திருநங்கையான நர்த்தகி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

narthagi natraj
author img

By

Published : Apr 3, 2019, 5:48 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரபல நடன கலைஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் திருநங்கையுமான நர்த்தகி நட்ராஜ் சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.

நர்த்தகி நட்ராஜ் பேட்டி

அதில், “மாற்று பாலினத்தவராக ஒரு திருநங்கையாக எங்களை இந்த சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான வழி தெரியாமல் தடுமாற்றத்தோடுதான் நாங்கள் பயணிக்கிறோம். எங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கும் அதே நேரத்தில் எங்களுக்கு இதுதான் தேவை என்பதை தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்த சமூகத்திற்கு உண்டு.

திருநங்கைகள் என்பவர்கள் எங்க வானத்திலிருந்து பிளந்துகொண்டோ அல்லது பூமியை கிழித்துக்கொண்டோ வரவில்லை. இந்த சமூகத்தில் ஒருவராக ஓர் அங்கமாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள். ஆகையால் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்கின்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும்.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகத்தில் இருந்தும் ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர்தான் களத்தில் இறங்கியுள்ளார். இது வேதனையாக இருக்கிறது. இதற்கு காரணம் சமூகம்தான். அவர்களது பெருமளவிலான வருகையை இந்த சமூகம் அங்கீகரிக்கவில்லை. அதனால்தான் அவர்களுக்கு இருக்கின்ற தயக்கத்தின் காரணமாக போட்டியிட முன்வர மறுக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் வேறு யாரைக்காட்டிலும் திருநங்கைகள் செய்கின்ற தியாகம் என்பது அளவிடற்கரியது. அவர்களுக்கு முறையான சமூக மரியாதை கிடைக்கும் பட்சத்தில் மிக நேர்மையான வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு.

அடுத்து மத்தியில் அமையக்கூடிய அரசு, மக்கள் எல்லோரின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கக்கூடிய வகையில், திருநங்கைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களுக்கு உரிய சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும். நான் நிறைய வெளிநாடுகளில் பயணப்பட்டு இருக்கிறேன். அங்கெல்லாம் தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டங்களும் நெறிமுறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நிலை நம் இந்தியாவிலும் வரவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

Intro:மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றார் போல் வழிநடத்துகின்ற ஒரு அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் பிரபல நடன கலைஞர் நர்த்தகி நடராஜ் வேண்டுகோள்

Body:etv பாரத் செய்திகளுக்காக பிரபல நடன கலைஞர் நர்த்தகி நடராஜ் மதுரையில் இன்று சிறப்பு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர் மாற்று பாலினத்தவராக ஒரு திருநங்கையாக எங்களை இந்த சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான வழிதெரியாமல் தடுமாற்றத்தோடு தான் நாங்கள் பயணிக்கிறோம் எங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கும் அதே நேரத்தில் எங்களுக்கு இது தான் தேவை என்பதை தர வேண்டிய கடமையும் பொறுப்பும் இந்த சமூகத்திற்கு உண்டு

திருநங்கைகள் என்பவர்கள் எங்க வானத்திலிருந்து பிளந்துகொண்டோ அல்லது பூமியை கிழித்துக் கொண்டோ வரவில்லை இந்த சமூகத்தில் ஒருவராக ஓர் அங்கமாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள் ஆகையால் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்கின்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும்

தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த தமிழகத்தில் இருந்தும் ஒரே ஒரு திருநங்கை வேட்பாளர் தான் தற்போது களத்தில் இருப்பது வேதனையாக இருக்கிறது இதற்கு காரணம் சமூகம் தான் அவர்களது பெருமளவிலான வருகையை இந்த சமூகம் அங்கீகரிக்க வில்லை அதனால் தான் அவர்களுக்கு இருக்கின்ற தயக்கத்தின் காரணமாக போட்டியிட முன் வர மறுக்கிறார்கள் உண்மையில் சொல்லப் போனால் வேறு யாரைக் காட்டிலும் திருநங்கைகள் செய்கின்ற தியாகம் என்பது அளவிடற்கரியது அவர்களுக்கு முறையான சமூக மரியாதை கிடைக்கும் பட்சத்தில் மிக நேர்மையான வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு

அடுத்து மத்தியில் அமையக்கூடிய அரசு எவ்வாறு எல்லோரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது அதுபோன்று திருநங்கைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களுக்கு உரிய சட்ட திட்டங்களை வகுக்க வேண்டும் நான் நிறைய வெளிநாடுகளில் பயணப்பட்டு இருக்கிறேன் அங்கெல்லாம் தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து சட்டங்களும் நெறிமுறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன அந்த நிலை நம் இந்தியாவிலும் வரவேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.