தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களும், தந்தை மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சாத்தான்குளம் விவகாரம்: குற்றம்சாட்டப்பட்டவர்கள் இடம் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை இவ்விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் சார்பு, ஆய்வாளர் ரகு, கணேஷ் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் பால்துரை கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மீதமுள்ள ஒன்பது பேரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இன்று (டிச. 21) மாலை 3 மணி அளவில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணை நடைபெறவுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படிங்க: உயர் நீதிமன்றத்தின் தினசரி வழக்குப் பட்டியலில் சாதிப்பெயர் உள்ளது ஏன்? - பாமக கேள்வி