மதுரை: திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கனகவல்லி, சுரேஷ், முருகன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், சிறையிலிருக்கும் சுரேஷ் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று (ஏப். 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை முடியாமல் நடந்து வருகிறது. இவ்வளவு தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதன்காரணமாக மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.
அவர் வழக்கு முடியும் வரை, வழக்கு நடைபெறும் நீதிமன்றத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும். அதேபோல வாரந்தோறும் புதன் கிழமை, சனிக்கிழமை ஆகிய 2 நாள்களில் விசாரணை நடத்தும் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பெரியகுளம் அரசு வழக்கறிஞர் நியமனம் ரத்து... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...