ETV Bharat / city

'வரலாற்று ஆவணங்களை ஏலம்விடுவது தேசத் துரோகம்!' - tamilnadu news

வரலாற்று ஆவணங்களை ஏலம்விடப் போவதாக அறிவித்துள்ள பிரசார் பாரதியின் முடிவு தேசத் துரோகம், இதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சு. வெங்கடேசன் எம்பி
சு. வெங்கடேசன் எம்பி
author img

By

Published : Oct 18, 2021, 12:26 PM IST

மதுரை: சு. வெங்கடேசன் எம்பி ட்விட்டர் மூலமாக இன்று (அக். 18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "தேச முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணங்களை ஏலம்விடும் பிரசார் பாரதி அமைப்பின் முடிவைக் கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

சு. வெங்கடேசன் எம்பி
சு. வெங்கடேசன் எம்பி

அக்கடிதத்தில், "தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம்விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு அக்டோபர் 8 அன்று முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம்விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணயசபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும்.

நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினைச் சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது. இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது நாட்டின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாகப் பாதிக்கக் கூடும்.

ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. இந்தச் சேமிப்பு ஆவணங்களுக்குச் சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதைப் 'பணமாக்க'ப்போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இப்படித் தரப்படும் உரிமைகளில் 'தனி உரிமைகளும்' (Exclusive rights) அடக்கம்.

இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை. கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது.

கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு. ஆகவே பிரசார் பாரதியின் முடிவைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.