ETV Bharat / city

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சம்மன் பெற குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்! - போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள், குற்றப்பத்திரிக்கையின் நகல்களைப் பெற இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

sathankulam_summon
sathankulam_summon
author img

By

Published : Nov 11, 2020, 12:10 PM IST

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது. இதையடுத்து, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மதுரை சிறையில் உள்ள 9 காவல் துறையினருக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலைப் பெறுவதற்கு, ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமைக்காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் பிரான்சிஸ், காவலர்கள் சாமத்துரை, வெயில் முத்து, செல்லத்துரை ஆகிய 9 பேரும் பாதுகாப்போடு இன்று(நவ.11) பிற்பகல் 3 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல் துறையினரால் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதையும் படிங்க: நகைகளை திருடி உருக்கிய நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.