மதுரை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் தமிழ்நாடு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதுரையில் அதிமுக பிரமுகர் பூமிநாதன் என்பவர், சசிகலா விடுதலையானதை வரவேற்று மதுரை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருடைய புகைப்படத்தோடு ஒட்டப்பட்டுள்ள "தியாகத்தின் சிம்மசொப்பனமே! தமிழ்நாட்டின் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளரே, தமிழகத்தின் கம்பீரமே! வருக,!வருக! போன்ற வாசகங்கள் அடங்கிய சசிகலா வரவேற்பு சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுங்கட்சியான அதிமுகவினரிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா