ETV Bharat / city

‘நான் என் கணவரை அடித்தேன் என்பது சுத்தப் பொய்’ - சசிகலா புஷ்பா

author img

By

Published : Jun 24, 2019, 9:58 PM IST

மதுரை: தனக்கும் தனது கணவருக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை என்றும், அவரை நான் தாக்கியதாக பரப்பப்படும் செய்தியில் உண்மை இல்லை என்றும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

கணவர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பா எம்பி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இன்று காலை டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வந்தடைந்தார். சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ராமசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சசிகலா புஷ்பா, ராமசாமி செய்தியாளர் சந்திப்பு

அப்போது, சசிகலா புஷ்பா கூறுகையில், "எனக்கும் என் கணவர் ராமசாமிக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை. டெல்லியில் நான் அவரைத் தாக்கினேன் என்று சொல்வது என் மீது அவதூறு பரப்பும் செயல். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் மீது இது போன்ற அவதூறுகள் பரப்புவதைத் தடுக்க தனியாக ஒரு அமைப்பை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

பின்னர் பேசிய சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, "என் மீதும், சசிகலா புஷ்பா மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோருக்கு சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
24.06.2019

தனக்கும் தனது கணவர் ராமசாமிக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை, டெல்லியில் நான் அவரை அடித்து தாக்கினேன் என்று சொல்வது என் மீது அவதூறு பரப்பும் செயல் என சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை விமான நிலையத்தில் பேட்டி.

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் மீது இது போன்ற அவதூறுகள் பரப்புவதை தடுக்க பெண்கள் தனியாக ஒரு அமைப்பை உருவாக்கும் சூழல் உருவாகி உள்ளது எனவும் சசிகலா புஷ்பா கருத்து.

என் மீதும் சசிகலா புஷ்பா மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோருக்கு சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் என சசிகலா புஷ்பாவின் கணவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ராமசாமியும் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்த தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சசிகலா புஷ்பா, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க முதல்வரும், துணை முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும், ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களுக்கு தேவையான நீர் தனியார் லாரிகள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது, அதே போல் நடிகர் ரஜினிகாந்த் மன்றத்தை சேர்ந்தவர்கள் இலவசமாக லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகின்றனர், அதே போல அரசியல்வாதிகள் - பொது வாழ்வில் ஈடுபட்டு உள்ளவர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உதவ முன்வர வேண்டும் எனவும்,

தமிழக அரசை மத்திய அரசு பல விஷயங்களில் நிர்பந்த படுத்தி வருகிறது எனவும்,

தமிழகத்திற்கான நான்கு பாராளுமன்ற மேல் சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பேட்டி - சசிகலா புஷ்பா எம்.பி.,

ராமசாமி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.