ETV Bharat / city

விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய தூதராக கிராமப்புற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
author img

By

Published : Jun 5, 2020, 4:25 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள 68 கிராமங்களை சேர்ந்த 168 பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு இலவச பயிற்சியை அம்மா அறக்கட்டளை நடத்திவருகிறது.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கபசுரக் குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கபசுரக் குடிநீர் பொடி வழங்கினார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "கரோனா பரவலை கட்டுப்பத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. வரும் எட்டாம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் பல தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

கிராமப்புறங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியராக மட்டுமல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய தூதராக இருக்க வேண்டும். உங்களிடம் படிக்க வரும் குழந்தைகளின் பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.