மதுரை மாவட்டம் சிலைமான் அருகேயுள்ள பொட்டப்பனையூர் ஆர்.எம். காலனியில் 15க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளை மாடுகள், பசு மாடுகள் ஆகியவை அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் திருடியதாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் திருடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளையும், பசுமாட்டையும் காவல் துறையினர் மீட்டு தரவில்லை என்றும், வழக்கு குறித்து சிலைமான் காவல் துறையிடம் கேட்டால் எந்தவொரு பதிலும் வரவில்லை என்று குற்றஞ்சாட்டி பத்துக்கும் மேற்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்தனர்.
'தர்பார் படத்தால் ரூ.25 கோடி நஷ்டம்' - விநியோகஸ்தர்கள் புகார்
அதில் ராதிகா என்கிற பெண் தற்கொலை செய்வதற்காக பையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.