மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வு ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு நாளான இன்று, தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 270க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அண்மையில் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக லண்டன், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நேரிலே சென்று அங்குள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தமிழ் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு, வேலைவாய்ப்பிற்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கும் வகையிலான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆகையால், இந்த விவகாரத்தில் கையாலாகாதவர்களின் விமர்சனத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
‘கையாலாகாதவர்களே முதலமைச்சரை விமர்சிக்கிறார்கள்!’ - Criticism of the Chief Minister's overseas trip
மதுரை: தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கையாலாகாதவர்களே விமர்சனம் செய்கின்றனர் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்வு ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு நாளான இன்று, தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 270க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அண்மையில் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக லண்டன், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நேரிலே சென்று அங்குள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தமிழ் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு, வேலைவாய்ப்பிற்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கும் வகையிலான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆகையால், இந்த விவகாரத்தில் கையாலாகாதவர்களின் விமர்சனத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கையாலாகாதவர்களே விமர்சனம் செய்கின்றனர். அதை நாங்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை' என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.
Body:முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கையாலாகாதவர்களே விமர்சிக்கிறார்கள் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்
'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கையாலாகாதவர்களே விமர்சனம் செய்கின்றனர். அதை நாங்கள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை' என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக இளந்தமிழர் இலக்கியப் பட்டறை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்து 270க்கும் மேற்பட்டோர் இப்பட்டறையில் பங்கேற்றுள்ளனர். அதில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் சான்றிதழும் பரிசுகளும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அண்மையில் மிகச் சிறப்பாக தமிழக அரசு நடத்தியது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும்பொருட்டு, தடையற்ற மின்சாரம், குடிநீர், போதுமான மனிதவளம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து கூறுகளையும் மிகச் சிறப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக லண்டன், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நேரிலே சென்று அங்குள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தமிழ் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு, வேலைவாய்ப்பிற்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கும் பொருட்டான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆகையால், இந்த விசயத்தைப் பொறுத்தவரை கையாலாகாதவர்கள் செய்யும் விமர்சனத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமானதாக அமையும்.
தென்மேற்குப் பருவமழையின்போது கிடைக்கக்கூடிய மழையை முறையாகச் சேமித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு நீர்நிலைகளைத் தூர்வார குடிமராமத்துத் திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.100 கோடியை ஒதுக்கியது. இரண்டாவது கட்டமாக 1550க்கும் மேற்பட்ட ஏரிகளைச் சீரமைப்பதற்காக 321 கோடியும் மூன்றாவது கட்டமாக ரூ.500 கோடியும் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அரசாணை எண் 50-ன்படி நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல்மண்ணை வயல்களில் உரமாகப் பயன்படுத்துவதற்கும் மண்பாண்டங்கள் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்த வண்டல்மண் அள்ளப்பட்டு வருகின்றன. இதில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. முறைகேடுகளைக் கண்காணிப்பதற்காக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
அப்போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் ஆகியோர் உடனிருந்தனர்.
Conclusion:
TAGGED:
முதலமைச்சரின் வெளிநாடு பயணம்