ETV Bharat / city

ராஜிவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை! - ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரன் மேல்சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது.

ராஜீவ் கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை

author img

By

Published : Feb 7, 2022, 7:57 PM IST

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசியான ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பரோல் வழங்கப்பட்ட நிலையில் ரவிச்சந்திரன், அவரது தாயார் ராஜேஸ்வரி வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் தங்கிவந்தார்.

இந்நிலையில் பரோல் காலத்தை இரண்டு முறை தமிழ்நாடு அரசு நீட்டித்து, வரும் 15ஆம் தேதியுடன் பரோல் முடிவடையவிருந்த நிலையில் இன்று காலை(பிப்.07) திடீரென நெஞ்சுவலி மற்றும் உடல் நலக்குறைவு ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து சூரப்பன்பட்டியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரப்பட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராஜீவ் கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை
ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை

இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரனுக்கு மேல்சிகிச்சை மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை அவசர வார்டு பிரிவில் ரவிச்சந்திரனுக்கு மருத்துவர்கள் ரத்த அழுத்தம், சிறுநீர், சளி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

ரவிச்சந்திரன் மருத்துவப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அவருடன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்கள் அளிக்கும் பரிசோதனை முடிவைப் பொறுத்து, பரோல் நாட்களை நீட்டிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் பழகியவரை கர்ப்பமாக்கிய காவல்துறை புள்ளி - நடவடிக்கை எடுப்பார்களா?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.