மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஜனவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, முருகன் தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும் மாலையில் தங்கக் குதிரை, தங்க மயில் ஆகிய வாகனங்களிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பமூட்டு தள்ளுதல், தை கார்த்திகை தினமான இன்று ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் பதினாறு கால் மண்டபத்திலுள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.
இதையும் படிங்க: 'விவசாயின்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும்' - நடிகர் அப்புகுட்டி