ETV Bharat / city

மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய மனு: நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு - மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய மனு

மதுரை: மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
author img

By

Published : Sep 24, 2019, 4:33 PM IST

Updated : Sep 24, 2019, 11:19 PM IST

மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் 85 விழுக்காடு இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 விழுக்காடு இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 27 ஆயிரத்து 44 இடங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கி, புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 2018 - 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட MBBS, BDS கலந்தாய்வில் மறுகலந்தாய்வு நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: சட்டக்கல்லூரி கலந்தாய்வில் மகனுக்குப் பதிலாக பங்கேற்கவுள்ள தந்தை! - உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

Intro:மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மருத்துவ கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Body:மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மருத்துவ கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதில்,"தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

எனவே,தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் .மேலும் தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என
கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எம்.சுந்தர் இன்று தீர்ப்பு கூறினார். அதில்,2018,2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட MBBS, BDS கலந்தாய்வில் மறுகலந்தாய்வு நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் அதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

மாணவர்கள் குறித்த இரட்டை இருப்பிட சான்றிதழ் புகார் எழுந்தால் தமிழக அரசு உரியவிசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.Conclusion:
Last Updated : Sep 24, 2019, 11:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.