மதுரை புதுத்தம் சாலை, ஜெயபாரத் ஹோம்ஸ் குடியிருப்புப்பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகள் ஷிவானி, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்பாண்டியன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கேவ் நகரில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் ஆரம்பித்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாணவர்களை பத்திரமாக மீட்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகரிடம் மாணவர்களின் பெற்றோர் நேற்று(பிப்.26) மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோபாலகிருஷ்ணன், “தனது மகள் கடந்த இரண்டு தினங்களாக இரவு எங்களிடம் தொடர்ந்து போனில் பேசி வருகிறார். தற்போது, மருத்துவ மாணவர்கள் தங்கியிருக்கும் இடம் அருகே குண்டு மழை பொழிவதால் பதற்றமான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறினார்.
அவர்களை தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
தனது மகளுடன் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள், மருத்துவம் படிக்க சென்றவர்கள், தற்போது இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வீடியோ பதிவு செய்து அனுப்பியதைப் பார்த்ததும் தங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றனர்.
இதையும் படிங்க: ஆஞ்சநேயர் கோயிலில் ரூ. 48 லட்சம் காணிக்கை!