சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதார வசதிகள் முற்றிலும் இல்லாததை அறிந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டனர்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்தில் இருப்பதால் நோயாளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
- இந்த ஆய்வை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மருத்துவமனை ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் மிக முக்கிய பங்காற்றி வரும் நிலையில் கழிவறை, குடிநீர், நோயாளிகளின் படுக்கை வசதி, நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர், செவிலியரின் எண்ணிக்கை இவை அனைத்திலும் குறைபாடு உள்ளது. அதிமுக அரசாங்கம் சுகாதாரத்துறையில் கூடுதல் கவனம் எடுத்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நோயாளிகளை கண்காணிக்கும் புதிய ஆடை கண்டுபிடிப்பு - மாணவிகள் சாதனை