மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள மத்திய அரசு நிதியின் கீழ் இயங்கும், நகர்ப்புற ஏழைகள் ஆதரவற்ற தங்கும் இல்லம், மதுரை மாநகராட்சியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கோவிந்தராஜ் என்பவர் இல்ல பொறுப்பாளராக உள்ளார். இந்த இல்லத்தில் 40 முதியவர்கள் (ஆண்/பெண் உட்பட) உள்ளனர்.
இத்தருணத்தில், இல்லத்தின் பொறுப்பாளரான கோவிந்தராஜ், ஒவ்வொரு முதியவரிடமும் தலா 1000 ரூபாய் பணம் கேட்டுத் துன்புறுத்துவதாக, வருவாய் கோட்டாட்சியர் முருகேசனுக்கு ரகசிய தகவல் வந்ததன் பேரில், அந்த இல்லத்தை வட்டாட்சியர் நாகராஜனுடன் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய சினிமா ஐகான்களால் களைகட்டிய கோவா சர்வதேச திரைப்படவிழா
மேலும், ஆதரவற்ற முதியவர்களிடம் பணம் கேட்டுத் துன்புறுத்தக்கூடாது என இல்ல பொறுப்பாளரிடம் கண்டித்ததுடன், இதுபோல் மீண்டும் புகார் வந்தால் தக்க நடவடிக்கை பாயும் என எச்சரித்த கோட்டாட்சியர் முருகேசன், இல்லத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவேடுகள் / கணக்குகள் (வரவு/செலவு) போன்றவற்றை அலுவலகத்தில் சமர்ப்பிக்க, இல்ல பொறுப்பாளருக்குக் கோட்டாட்சியர் உத்தரவிட்டுச் சென்றார்.